பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   31
Zoom In NormalZoom Out


 

நூலொழுக் கன்றெனத்
தேறாத் தெளிவொடு கூறா தடக்கி
மாயமென் றஞ்சின் மற்றிது முடிக்கும்
வாயி லில்லென வலித்தனன் றுணிந்து
தாய்முத லிருந்துதன் னோய்முத லுரைப்ப
ஒள்ளிழை கணவனு முரிமையுட் டெளிந்த
கொள்கை யறிந்தியான் கூறவும் வேண்டா
அருமறை யன்மையி னன்பிற் காட்டி
ஒருவயி னொண்டொடிக் குற்றது கேளென
ஏதின் மன்னர் தூதுவ மாக்கள்
வந்தது வடுவெனத் தந்தையொ டூடி
அறத்தா றன்றியு மாகுவ தாயின்
துறத்தல் வேண்டுந் தூய்மை யோற்கெனத்
துணிவுள் ளுறுத்த முனிவின ளாகி
நன்மணி யைம்பா னருமதைக் கரற்றிய
மன்ன குமரன் மனம்பிறி தாயினும்
எந்தையும் யாயு மின்னகை யாயத்துப்
பைந்தொடிச் சுற்றமும் பலபா ராட்ட
மாசில் வீணை மடமொழிக் கீந்தோன்
ஆசா னென்னுஞ் சொற்பிறி தாமோ
அண்ணற் குமரற் கடிச்செருப் பாகெனத்
தன் மனங் கொண்டவ டாவ முற்றிச்
சாவினை துணியு மாத்திரை யாவதும்
மறுவொடு மிடைந்து மாண்பில வாகிய
சிறுசொற் கிளவி கேளல செவியென
அங்கையிற் புதைஇ யணிநிற மழுகிய
நங்கையைத் தழீஇ நன்னுத னீவி
மனங்கொள் காரண மருளக் காட்டி
இனமி லொருசிறை யின்னினி தாகப்
பூமலி சேக்கையுட் புகுத்தினென் போந்தேன்
பாயலு ளாயினும் பரிவவ டீர்கென
இஃதவ ணிலைமை யின்னினிக் கொண்டு
பரிவுமெய்ந் நீங்கிப் பசலையுந் தீர்கென
ஒண்ணுதன் மாதர் கண்ணேப் பெற்ற
புண்ணுறு நெஞ்சிற் புலம்புகை யகல
மாதர் நுதலிய மருந்தியற் கிளவி
ஆருமி லொருசிறை யன்புறப்