பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   32
Zoom In NormalZoom Out


 

பயிற்றி
நிலைமைக் கொத்த நீதியை யாகித்
தலைமைக் கொத்த வதுவை யெண்ணென
இழுக்க மில்லா வியல்பொடு புணர்ந்த
ஒழுக்க மெல்லா மோம்படுத் துரைஇப்
பூட்டுறு பகழி வாங்கிய வேட்டுவன்
வில்விசை கேட்ட வெரூஉப்பிணை போலக்
காவ லாட்டியர் நாமிசை யெடுத்த
சொல்லிசை வெரீஇய மெல்லென் பாவை
என்முகத் தேயு மிறைஞ்சிய தலையள்
நின்முகத் தாயி னிகழ்ந்ததை நாணி
நிலம்புகு வன்ன புலம்பின ளாகிச்
சிறுமையி னுணர்ந்த பெருமக னிரங்க
மண்கெழு மடந்தாய் மறைவிடந் தாவென
ஒன்றுபுரி கற்பொ டுலகுவிளக் குறீஇப்
பொன்ற லாற்றிய புகழாள் போலக்
கொண்ட கொள்கையி னொண்டொடி யோளும்
துளிப்பெயன் மொக்குளி னொளித்த லஞ்சுவென்
இன்றைக் கேள்வி யிடையிடு மெனினும்
சென்றயா நங்கையைச் செவ்வி நோக்கி
இன்றுணை மகளிரொ டொன்றியான் விடுத்தரும்
சொல்லோடு படுத்துச் செல்கவென் களிறென
அவன்வயி னீங்கி யாயங் கூஉய்
மகள்வயிற் புக்கு மம்மர்நோய் நீக்கி
நல்லோள் கற்கு நாழிகை யிறந்தன
வல்லோன் செல்கதன் வளநக ரகத்தெனக்
காஞ்சன மாலாய் காவலற் குரையென
மணிப்படு மாடத்து வாயில் போந்தவள்
பணித்த மாற்ற மணித்தகைக் குரைப்ப
ஆர மார்பனும் பேர்வன னெழுந்து
கற்றில ளென்னுங் கவற்சி வேண்டா
பற்றிய கேள்வியு முற்றிழை முற்றினள்
குஞ்சர வேற்றுங் கொடித்தேர் வீதியும்
பொங்குமயிர்ப் புரவியும் போர்ப்படைப் புணர்ப்பும்
நீதியும் பிறவு மோதிய வெல்லாம்
நம்பி குமரருந் தந்துறை முற்றினர்
வல்லவை யெல்லாம் வில்லோன் மக்களை
நல்லவைப்