படுப்பது நாளை யாதலின் என்னறி யளவையி னொண்ணுதல் கொண்ட தைவரற் கியைந்த தான்பயில் வீணையைக் கையினுஞ் செவியினுஞ் செவ்விதிற் போற்றி ஆராய் கென்பது நேரிழைக் குரையென விசும்பா டூசல் வெள்வளைக் கியற்றிய பசும்பொன் னாகத்துப் பக்கம் பரந்த நறும்புகை முற்றத்து நம்பி நடக்கெனக் குறும்புழை போயினன் கோலவர் தொழவென். கோவலர் கைதொழக் கோயில் போகி வேல்கெழு முற்றமொடு வீதியி னீங்கிக் குஞ்சரச் சேரித் தன்னக ரெய்தி அன்றை வைகல் சென்ற பின்னர் முரசுகடிப் பிகுத்த மூரி முற்றத் தரசிறை கொண்ட வகன்கண் வாரியுட் கையார் கடகத்துக் கதிர்வாட் கச்சையர் ஐயா யிரவ ரரச குமரரொடு பொன்றலை யாத்த பொதியிற் பிரம்பின் வண்ணச் செங்கோல் வலவயிற் பிடித்த எண்ணூற் றறுவ ரிளங்கிடை காப்பரொடு புறஞ்சுற் றமைத்த பிறங்குகடைப் படுகால் நித்திலந் தொடரிய நிகரில்கம் மத்துச் சித்திரம் பயின்ற செம்பொன் விதானத்துச் சந்தனப் பீடிகைச் சார்வணை யேறிப் பன்மயிர்க் கவரியொடு பரிசனஞ் சுற்றப் பெருமக னிருந்த திருமலி யவையத்துக் கொற்ற வேந்தன் குடிகெழு குமரரைக் கற்றவை காட்டும் வத்தவர் கோவெனப் பல்பெருங் கேள்வி படைத்தோ ரன்ன கல்வி மாந்தர் கலித்த கௌவையில் ஆப்புறு பாடமொ டருத்தங் கூறி நாக்கொள் கேள்வி

|