நவிற்றிக் காட்டி மண்டல மருங்கிற் கொண்டகம் புகுந்து படைகெழு தெய்வம் புகலப் பலிவகுத் திடைநாட் பிறையி னேற்றிய திருவிற் கண்ணா லுறுத்துக் கடவதிற் றாங்கி எண்ணா லரணமு மீரெண் கரணமும் துன்னரும் பாசமொடு தொடங்குபு தோன்றி அரிதியல் சாரியை யந்தரத் தியக்கமும் பொருவின் னாழிகை பூணு மாறும் செருவா ளாட்டுஞ் சேடகப் பிண்டியும் சாரியை விலக்கும் வேறிரி வகையும் இடுக்கட் போதி னேமப் பூமியுள் வகுத்த வாயில் வகைவகை யிவையென ஒட்டும் பாய்த்துளுங் கரந்தொருங் கிருக்கையும் செருக்கொள் யானை மருப்பிடைத் திரிவும் தாழாச் சிறப்பிற் பாழியிற் பயின்ற காலாட் கரும விகற்பமுங் காட்டிக் கருவித் தாக்கினுங் காலாட் சுற்றினும் தனியி னாயினுந் தானையொ டாயினும் புகவும் போக்கும் பொச்சாப் பின்றிப் பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி வண்பரிப் புரவியும் வானெடுந் தேரும் அண்ணல் யானையும் பண்ணுறுத் தேறி இலைய வினப்பரி கொளீஇச் சிலையின் மதியோர் புகழ்ந்த மரபியல் வழாமை நுதியமை நுண்படை நூல்வழிச் சிதறி மழைத்துளி படினும் வான்றுகள் சூழினும் விலக்கித் தவிர்க்கும் விற்றொழி லுள்ளிட் டிலக்கத் திண்படை யேறுபல காட்டலும் தலைத்தேர் யானைக்குந் தருக்கின ராயினர் படைத்தே ராள பாலக ரிவரென அவைபுகழ்ந் தெடுத்த வரும்பெறற் கிளவியாடு தகைமுடி வேந்தன் றாள்புகழ்ந் தேத்தித் தகைசால்

|