பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   36
Zoom In NormalZoom Out


 

னாடகக் குழுக்களும் வருகென
யாழுங் குழலு மரிச்சிறு பறையும்
தாழ முழவுந் தண்ணுமைக் கருவியும்
இசைச்சுவை தரீஇ யெழுபவு மெறிபவும்
விசைத்தெறி பாண்டிலொடு வேண்டுவ பிறவும்
கருவி யமைந்த புரிவளை யாயமொடு
பல்லவை யிருந்த நல்லா சிரியர்
அந்தர வுலகத் தமரர் கோமான்
இந்திரன் மாணக ரிறைகொண் டாங்குப்
பொருவேன் முற்றத்துப் புரிவனர் புகுதரப்
பாடன் மகளிர் பல்கல னொலிப்ப
ஆடன் மகளி ராயமொடு கெழீஇ
வேல்வேந் திருந்த நூல்வேண் டவையத்துத்
துகிர்த்துலா மண்டபத் தகிற்புகை கமழக்
கண்டங் குத்திய மண்டப வெழினியுட்
டாயுறை வியனகர்த் தமர்பா ராட்ட
ஆயஞ் சுற்ற வணியிழை புகுதந்
தொலிபெறு கீதத் தோதை போகிய
பலிகெழு நல்யாழ் பாங்குறத் தழீஇக்
கின்னர கீதத்துக் கேள்வி மாந்தர்
முன்னுற நின்று மூதறி செவிலிநும்
மகண்மா ணாக்கி வணங்கு நும்மென
அவைப்பரி சாரங் கடத்துளிப் போக்கி
ஐவகைக் கதியு மற்ற மின்றித்
தெய்வ நல்யாழ் திருந்திழை தைவர
மெய்பனிப் பதுபோன் மொய்யவை மருள
நாற்பெரும் பண்ணு மெழுவகைப் பாலையும்
மூவேழ் திறத்தொடு முற்றக் காட்டி
நலமிகு சிறப்பொடு நல்லவை புகழ
இயம்வெளிப் படுத்தபி னிசைவெளிப் படீஇய
எரிமலர்ச் செவ்வா யெயிறுவெளிப் படாமைத்
திருமலர்த் தாமரைத் தேன்முரன் றதுபோற்
பிறந்துழி யறியாப் பெற்றித் தாகிச்
சிறந்தியம் பின்குரற் றெளிந்தவ ணெழுவச்
சுருக்கியும்