பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   37
Zoom In NormalZoom Out


 

பெருக்கியும் வலித்து நெகிழ்த்தும்
குறுக்கியு நீட்டியு நிறுப்புழி நிறுத்தும்
மாத்திரை கடவா மரபிற் றாகிக்
கொண்ட தானங் கண்டத்துப் பகாமைப்
பனிவிசும் பியங்குநர் பாடோர்த்து நிற்பக்
கனிகொ ளின்னிசைக் கடவுள் வாழ்த்தித்
தேவ கீதமொடு தேசிகந் தொடர்ந்த
வேத வின்னிசை விளங்கிழை பாடத்
திருந்திழை மாதர்கொ றெய்வங் கொல்லென
இருந்தவர் தெருளா ரிசைபுகழ்ந் தேத்தி
நூலுஞ் செவியு நுண்ணிதி னுனித்தே
யாழும் பாடலு மற்ற மின்றி
விலக்கும் விடையும் விதியி னறிந்து
துளக்கில் கேள்வித் தூய்மையின் முற்றி
வத்தவ நாடன் வாய்மையிற் றருக்கும்
கொற்ற வீணையுங் கொடுங்குழை கொண்டனள்
இறைகெழு குமரரு மேனை விச்சைத்
துறைநெறி போகிய துணிவின ராயினர்
தேயாத் திருவ நீயுந் தேரின்
நிலங்கொடை முனியாய் கலங்கொடை கடவாய்
வேள்வியிற் றிரியாய் கேள்வியிற் பிரியாய்
இனையோய் தாணிழற் றங்கிய நாடே
வயிர வெல்படை வானவ ரிறைவன்
ஆயிரங் குஞ்சரத் தண்ணல் காக்கும்
மீமிசை யுலகினுந் தீதிகந் தன்றெனத்
தொல்லிசை யாளர் சொல்லெடுத் தேத்தப்
புகழார் வெய்திய திகழ்முடிச் சென்னியன்
ஆசில் பாட லமிழ்துறழ் நல்யாழ்க்
கேள்வி நுனித்த கீத வித்தகத்
தாசா ரியரொ டரங்கியன் மகளிரை
ஏடுகோ ளாள ரெனையரென் றெண்ணிப்
பேரெழுத் தோலை பெறுமுறை நோக்கிக்
கட்டுடைக் கலனுங் கதிர்முத் தாரமும்
பட்டியற் கலிங்கமொடு பாசிழை நல்கி
இலைத்தொழிற் றடக்கைய ளெழுந்தீ கினியெனக்
கலைத்தொழி லவையங் கைதொழப் புக்காங்
கிருந்த விறைவன் றிருந்தடி குறுகிச்
செம்பொ னல்