பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   38
Zoom In NormalZoom Out


 

யாழ் சிலதிகைந் நீக்கி
அணங்குறை மெல்விரல் வணங்கினள் கூப்பி
இறைஞ்சிய மாதரை யெடுத்தனன் றழீஇப்
பிதிர்சுணங் காகமொடு பெருந்தோ ணீவிக்
கதிர்பொற் பட்டமொடு கனங்குழை திருத்தி
ஒண்ணுதன் மாதரை யொருகை பற்றிப்
பொன்னிழை தாயுழைப் போகெனப் புகலலும்
தான்முன் கண்ட தவற்றின ளாதலிற்
சென்ற வாயிற் கொன்றல ளூடிப்
புலவியிற் கருகிய திருமுக மிறைமகட்
குவகையின் மகிழ்ந்த முறுவல ளாகிக்
கடைக்கட் டூதாற் காவலற் கடைஇச்
சுடர்க்குழை பயந்தோள் சொல்லா ணிற்ப
இன்சொன் மகளி ரெனைப்பல ருள்ளும்
நுந்தை நெஞ்ச நீயறப் பெற்றாங்
குரக்களி றடக்கிய வோசைத் தாகி
வரத்தொடு வந்த வசைதீர் சிறப்பின்
வத்தவ குலத்துத் துப்பெனத் தோன்றிய
தகையொலி வீணையொ டவைதுறை போகி
உருவிற் கொத்த திருவினை யாகிக்
குடிவிளக் குறூஉங் கொடியே வாவென
மாத ராயத்து மகள்வயிற் கொளீஇத்
தாய ரெல்லாந் தழீஇயினர் முயங்கிச்
சுற்ற மாந்தர் தொக்கனர் புகல
வத்தவ ரிறைவனை வருகெனக் கூஉய்ப்
பொற்கோட் டம்பலம் பொலிய வேறிக்
கற்றறி வாளர் சுற்றிய நடுவட்
டாமுயல் வேட்கையின் மாநிலத் துறையுநர்
மரமுதல் சாய மருந்துகொண் டாஅங்கு
நங்குடி வலித்தல் வேண்டி நம்பி
தன்குடி கெடுத்த தகவி லாளனேன்
என்மனம் புகல வேண்டி னிவனைத்தன்
மண்மிசை நிறுக்கு மந்திர மிருக்கென
மதிவ லாளர் விதிவகை யிதுவெனத்
தண்ணுஞ் சேனையுந் தகைக்கோ சம்பியும்
பண்டுகண் ணழிந்த பகையினை நீக்கிப்
பொன்னு நெல்லும் புரிவின் வழங்குகென்
றொன்றெனப் பயிற்றி யுருமிடித் தன்ன
வென்றி முரசம் வீதிதோ றெருக்கி