பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   39
Zoom In NormalZoom Out


 

முன்யா னிவனை முருக்கலும் வேண்டினென்
பின்யா னிவனைப் பெருக்கலு முற்றனென்
எமர னாயி னிறைகொடுத் தகல்க
அமர னாயி னமைவொடு நிற்கென
அடல்வேற் றானை யாருணி யரசற்கு
ஞாலத் தின்னுயிர் வாழ்வோர் நாப்பட்
காலம் பார்க்குங் காலன் போல
வெல்போ ருதயணன் வெஃறுணை யாகப்
பல்கோ டியானைப் பாலகன் வருமெனக்
கணக்குத்துறை முற்றிய கடுஞ்சொ லோலை
அரக்குப்பொறி யொற்றி யாணையிற் போக்கி
எண்படைத் தலைவரு மிருபிறப் பாளரும்
எண்பதி னாயிர மிளம்பது வாய்களும்
ஏற்றினம் வரூஉ நாற்றங் கழுமிய
மதங்கவுட் பிறந்த கதந்திகழ் படாத்த
ஐந்நூ றியானையு மாயிரம் புரவியும்
எண்பது தேரு மிருவகைத் தொறுவும்
நன்மணி யைம்பா னருமதை யுள்ளுறுத்
திரங்குபொற் கிண்கிணி யரங்கிய லாயத்து
நாடக மகளிர் நாலெண் பதின்மரும்
கோடிய லூர்தியுங் கொண்டுவிசி யுறுத்துக்
கோடி விழுநிதி கொண்டகஞ் செறிக்கப்
பாடியல் பண்டியொடு படைசெலல் விதித்து
வளங்கெழு தாயத்து வழியடை யாகிய
இளங்கோ நம்பியு மிவனொடு செல்கென
மாண்மொழிக் குருசி லாணைவைத் தகம்புக
நாள்கொண் டெழுவது நாளை யாமென
அமைச்சனுஞ் செவிலியு மமைந்த வகையால்
நாள்கொளற் கிருந்துழி நன்னகர் கேட்பக்
கழிந்த யாண்டுங் கயநீ ராட்டணி
ஒழிந்ததன் றண்ட முயர்கொடி மூதூர்க்
குருதி வெள்ளங் கூலம் பரப்பி
அழுகுரன் மயங்கி வல்லற் றாக
மதவலி வேழ மைய லுறுத்த
கடவுள் யானெனக் கடவுட் காட்டிப்
பேரிசைக் கடவுட் பெருநகர்த் தோன்றிச்
சேரி யாயத்துச்