பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   40
Zoom In NormalZoom Out


 

செம்முதிர் பெண்டிரொடு
கட்டறி மகடூஉக் கடிமுறத் திட்ட
வட்ட நெல்லு மாண்பில பெரிதெனக்
குற்ற முண்டெனிற் கூறுமி னெமக்கெனக்
கருங்காற் கலிங்கமொடு காஅழ் கலக்கிப்
பிட்ட வாயள் பெரும்பா கீரதி
பொய்ப்பே யேறிப் பொள்ளென நக்கு
முலையிடைத் துளங்கு முத்துற ழாரமொடு
தகையெருத் துரிஞ்சுந் தமனியக் குழையள்
கொடும்பூண் மார்பிற் கூந்தல் பரப்பிப்
பிடிக்கை யன்ன பெருந்தோ ளோச்சி
இடிக்குரன் முரசின்மு னெழுந்தன ளாடி
விழாக்கோ ளாளரைக் குழாத்திடைத் தரீஇத்
திருநீ ராட்டணி மருவீ ராயிற்
பிணக்குறை படுத்துப் பிளிறுபு சீறிய
இன்றுஞ் சென்றியான் குஞ்சரம் புகுவலென்
றஞ்சி லோதி யணங்குவாய் கூறப்
பன்றியெறி யுற்ற புண்கூர் ஞமலி
குன்றா வடிசிற் குழிசி காணினும்
வெரீஇ யன்ன வியப்பின ராகி
அலகை மூதூ ரான்றவ ரெல்லாம்
உலகந் திரியா வொழுக்கின ராதலிற்
காவன் மன்னற்குக் கதுமென வுரைத்தலிற்
றேவர் சொல்லும் தேததை யாகென
வெண்முகை யடுத்துப் பைந்தோடு படுத்து
மாத ரங்கையின் மங்கலத் தியற்றிய
வாகைக் கண்ணி வலத்திற் சூட்டித்
தானைச் சேரித் தலைப்பெருந் திருவன்
நாணீ ராட்டணி நாளையென் றறைதலும்
விளையாட் டீரணி விற்றுங் கொள்ளும்
தொலைவின் மூதூர்த் தொன்றின மறந்துராய்த்
தோணியு மரமுந் துறைநா வாயும்
நீரியன் மாடமு நீந்தியற் புணையும்
சுண்ணமுஞ் சூட்டுஞ் சுவைநறுந் தேறலும்
செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும்
கண்ணார் பிடிகையுங் கட்டமை யூர்தியும்
பண்ணிரும் பிடியும் பண்ணுவனர் மறலிச்
செவ்வி பெறாஅ