பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   41
Zoom In NormalZoom Out


 

வைகல ராகி
வான்கிளர்ந் தன்ன வளநீ ராட்டணி
சேணிடை யுறைநருஞ் சென்று காண்புழிப்
புதவகத் துறைந்தோர் போம்பொழு தென்றென
உதயண குமரனை யோர்த்துறச் சொல்லி
நூலறி வாளர் நால்வரை விட்டபின்
உவாக்கடற் பரப்பி னொல்லென மயங்கி
விழாக்கொண் டன்றால் வியனகர் விரைந்தென்
விரைந்தனர் கொண்ட விரிநீ ராத்திரை
புரந்துட னயரும் பொலிவின தாகி
மல்லன் மூதூ ரெல்லாச் சேரியும்
பயிர்வளை யரவமொடு வயிரெடுத் தூதி
இடிமுர செறிந்த வெழுச்சித் தாகி
யாழுங் குழலு மியம்பிய மறுகின்
மாலை யணிந்த மணிக்காழ்ப் படாகையொடு
கால்புடைத் தெடுத்த கதலிகை நெடுங்கொடி
ஆர்வ மகளிரு மாய்கழன் மைந்தரும்
வீர குமரரும் விரும்புவன ரேறிய
மாவுங் களிறு மருப்பிய லூர்தியும்
காலிரும் பிடியுங் கடுங்காற் பிடிகையும்
தேரு மாக்களுந் தெருவகத் தெடுத்த
எழுதுகள் சூழ்ந்து மழுகுபு மாழ்கிப்
பகலோன் கெடுமெனப் பாற்றுவன போல
அகலிரு வானத் துகடுடைத் தாட
விசும்புற நிமிர்ந்த பசும்பொன் மாடத்து
வெண்சுடர் வீதி விலக்குவனர் போல
எண்ணரும் பல்படை யியக்கிடம் பெறாஅ
நகர நம்பிய ரரச குமரர்
நிறைகளி றிவைகா ணீங்குமி னெனவும்
இறைவ னாணை யீங்கெவன் செய்யும்
புதல்வ ராணை புதுநீ ராட்டெனச்
சிறாஅர் மொய்த்த வறாஅ விருப்பிற்
கம்பலைத் தெருவி னெம்பரு மெடுத்த
குடையுங் கொடியுங் கூந்தற் பிச்சமும்
அடல்வே லியானை யடக்குங்