காழும் களிறெறி கவரியொடு காண்டக மயங்கிப் பெருநீர்க் கருங்கட றுளுப்பிட் டதுபோல் ஒண்ணுதன் மகளி ருண்க ணிரைத்த கஞ்சிகை துளங்கக் கயிற்றுவரை நில்லாச் செஞ்சுவற் பாண்டியஞ் செல்கதி பெறாஅ குரைத்தெழுந் துகளுங் குரம்புவி நிரைத்துடன் சங்கிசை வெரீஇச் சால்பில பொங்கலின் அவிழ்ந்த கூந்த லங்கையி னடைச்சி அரிந்துகால் பரிந்த கோதைய ராகத்துப் பரிந்துகா ழுகுத்த முத்தினர் பாகர்க்குக் காப்பு நேரிய கூப்பிய கையினர் இடுக்க ணிரப்போர் நடுக்க நோக்கி அரறுவ போல வார்க்குந் தாரொ டுரறுபு தெளித்துக் கழறும் பாகர் வைய நிரையும் வயப்பிடி யொழுக்கும் கைபுனை சிவிகையுங் கச்சணி மாடமும் செற்றுபு செறிந்தவை மொக்கு ளாக மக்கட் பெருங்கடன் மடைதிறந் ததுபோல் எத்திசை மருங்கினு மிவர்ந்துமே லோங்கிய கட்டளை வாயி லிவர்வனர் கழிந்து வரம்பில் பல்சனம் பரந்த பழனத் தாற்றிரு கரையி னசோகம் பொழிலினும் காய்த்தொசி யெருத்தின் கமுகிளந் தோட்டமும் மயிலுங் குழிலு மந்தியுங் கிளியும் பயில்பூம் பொதும்பினும் பன்மலர்க் காவுதொறும் உயரத் தொடுத்த வூசல தாகி மரந்தொறு மொய்த்த மாந்தர்த் தாகிப் புறங்கவின் கொண்ட நிறங்கிளர் செல்வத் தூரங் காடி யுய்த்துவைத் ததுபோல் நீரங் காடி நெறிப்பட நாட்டிக் கூல வாழ்நர் கோன்முறை குத்திய நீலக் கண்ட நிரைத்த மருங்கின் உண்ண மதுவு முரைக்கு நானமும் சுண்ணமுஞ் சாந்துஞ் சுரும்பிமிர் கோதையும் அணியுங் கலனு மாடையு

|