பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   43
Zoom In NormalZoom Out


 

நிறைந்த
கண்ணகன் கடைக ளொண்ணுத லாயத்துக்
கன்னி மாண்டுழித் துன்னுபு நசைஇய
தூதுவர் போல மூசின குழீஇ
ஆணைத் தடைஇய நூனெறி யவையத்துக்
கல்வி யாளார் சொல்லிசை போல
வேட்போ ரின்றி வெறிய வாக
மாக்க ளுழிதரு மணனெடுந் தெருவின்
மடலிவர் போந்தை மதர்வைவெண் டோட்டினும்
படலைவெண் சாந்தினும் படத்தினு மியன்ற
பந்தரும் படப்பும் பரந்த பாடி
அந்தமு மாதியு மறிவருங் குரைத்த
யோசனை யகலத் தொலிக்கும் புள்ளிற்
றேவரும் விழையுந் திருநீர்ப் பொய்கைக்
கரையுங் கழியுங் கானலுந் துறையும்
நிரைவளை மகளிர் நீர்பாய் மாடமொடு
மிடைபுதலை மணந்த மேதகு வனப்பிற்
கடல்கண் கூடிய காலம் போல
நூல்வினை நுனித்த நுண்வினைப் படாத்துத்
தானக மாடமொடு தலைமணந் தோங்கிய
வம்புவரி கொட்டிலொடு வண்டிரை மயங்கிச்
செவ்வான் முகிலிற் செறிந்த செல்வத்
தெவ்வாய் மருங்கினு மிடையறக் குழீஇ
ஊரிறை கொண்ட நீர்நிறை விழவினுள்
இறைவன் பணியென் றிறைகொண் டீண்டி
நிறைபுனற் புகாஅர் நின்னகத் தோரென
விழாக்கோ ளாளர் விரைந்துசென் றுரைத்தலும்
உவாக்கட லொலியி னுரிமையொ டுராஅய்
விழாக்கொள் கம்பலின் வெகுண்டுவெளின் முருக்கி
எழாநிலை புகாஅ வினங்கடி சீற்றத்
தாணை யிகக்கு மடக்கருங் களிறு
சேணிகந் துறைந்த சேனையிற் கடிகென
வேந்துபிழைத் தகன்ற வினைவ ராயினும்
சேர்ந்தோர்த் தப்பிய செறுந ராயினும்
கலங்கவர்ந் தகன்ற கள்வ ராயினும்