பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   44
Zoom In NormalZoom Out


 

நிலம்பெயர்ந் துறைத னெடுந்தகை வேண்டான்
தொகுதந் தீண்டிக் கிளைஞ ராகிப்
புகுதந் தீகவிப் புனலாட் டகத்தெனச்
சாற்றிடக் கொண்ட வேற்றுரி முரசம்
திருநகர் மூதூர்த் தெருவுதோ றெருக்கி
மெய்காப் பிளைய ரல்லது கைகூர்ந்
திடைகொள வரினு மிருபத் தொருநாட்
படைகொளப் பெறாஅப் படிவத் தானையன்
தாழ்புனற் றாரையுந் தமரொடு தருக்கும்
நாழிகைத் தூம்பு நறுமலர்ப் பந்தும்
சுண்ண வட்டுஞ் சுழிநீர்க் கோடுமென்
றெண்ணிய பிறவு மிளையோர்க் கியைந்த
புனலகத் துதவும் போகக் கருவி
பணையெருத் தேற்றிப் பண்ணின வாகி
மாலையு மணியு மத்தகப் பட்டும்
கோதையு மணிந்த கோல முடையன
திருநீ ராட்டினுட் டேவியர்க் காவன
மேவிய வனப்பொடு மிசைபிறர்ப் பொறாதன
பாக ரூரப் பக்கஞ் செல்வன
ஆறாட் டிளம்பிடி யாயிரத் தங்கட்
குறும்பொறை மருங்கிற் குன்றம் போல
இருநில நனைப்ப விழிதரு கடாத்துக்
கைம்மிகக் களித்த கவுள தாயினும்
செயிர்கொண் மன்னர் செருவிடத் தல்ல
துயிர்நடுக் குறாஅ வேழம் பண்ணி
அரசுகை கொடுப்ப வண்ணாந் தியலிக்
கடிகை யாரங் கழுத்தின் மின்னப்
பயிர்கொள் வேழத்துப் பணையெருத் திரீஇக்
கடவுட் கல்லது காறுளக் கில்லது
தடவுநிலை நிழற்றிய தாம வெண்குடை
ஏந்திய நீழற் சாந்துகண் புலர்த்திய
பரந்த கவரிப் படாகைச் சுற்றத்
துயர்ந்த வுழைக்கலத் தியன்ற வணியின்
முந்நீ ரொலியின் முழங்கு முரசமொ
டின்னீர் வெள்வளை யலறு மார்ப்பின்
மைந்துன மன்னரு மந்திரத் துணைவரும்
அத்துணை சான்ற வந்த ணாளரும்
சுற்றுபு சூழ முற்றத்