நக்கிரப் பலகையு நறுஞ்சாந் தம்மியும் கழுத்திடு கழங்குங் கவறுங் கண்ணியும் பந்தும் பாவையும் பைங்கிளிக் கூடும் யாழுங் குழலு மரிச்சிறு பறையும் தாழ முழவமுந் தண்ணுமைக் கருவியும் ஆயத் துதவு மரும்பெறன் மரபிற் போகக் கலப்பையும் பொறுத்தனர் மயங்கிக் கூனுங் குறளு மாணிழை மகளிரும் திருநுத லாயத்துத் தேவிய ரேறிய பெருங்கோட் டூர்திப் பின்பின் பிணங்கிச் செலவுகண் ணுற்ற பொழுதிற் பலருடன் பண்டிவ் வாழ்வினைத் தண்டியுங் கொள்வோள் இன்றிந் நங்கை கண்டதை யுண்டுகொல் பாணி செய்தனள் காண்மின் சென்றென ஏறிய வையத் தெடுத்த கஞ்சிகைத் தேறுவா மதியிற் றிருமுகஞ் சுடரக் கதிர்விரற் கவியலுட் கண்ணிணை பிறழ நெருக்குறு சுற்றத்து விருப்பி னோக்கி ஒட்டிழை மகளிரை விட்டனர் நிற்பச் சுட்டுருக் ககிலின் வட்டித்துக் கலந்த வண்ண விலேகை நுண்ணிதின் வாங்கி இடைமுலை யெழுச்சித் தாகிப் புடைமுலை முத்திடைப் பரந்த சித்திரச் செய்கொடி முதலின் முன்னங் காட்டி நுதலின் சுட்டியிற் றோன்றிய சுருளிற் றாகி வித்தகத் தியன்றதன் கைத்தொழில் காட்டி இன்னிசை வீணை யன்றியு நின்வயின் உதயண நம்பி யோவியத் தொழிலின் வகையறி யுபாயமும் வல்லை யாகெனத் தந்தது முண்டோ பைந்தொடி கூறென உற்ற புருவத் தொராஅ ராகி முற்றிழை மகளிர் முறுவல் பயிற்றச் செழுங்குரன் முரசிற் சேனா பதிமகள் ஒருங்குயிர் கலந்த வுவகைத் தோழியை நறுநீர்க் கோலத்துக் கதிர்நலம் புனைஇயர் நீடகத் திருந்த வாசவ தத்தையை நீசெலற் பாணிநின் றாய ரெல்லாம் தாரணி வையந் தலைக்கடை

|