பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   47
Zoom In NormalZoom Out


 

நிறீஇ
நின்றனர் திருவே சென்றிடு விரைந்தென
விளங்குபொன் னறையுள விழுநிதிப் பேழையுள்
இளங்கலந் தழீஇ யெண்ணிமெய்ந் நோக்கித்
தோழியர்க் கெல்லா மூழூழ் நல்கி
வதுவை வைய மேறினள் போலப்
புதுவது மகிழ்ந்த புகற்சிய ளாகிப்
பதும காரிகை மகண்முக நோக்கித்
தனித்துஞ் சேனைப் பனித்துறைப் படியின்
நீரின் வந்த காரிகை நேர்த்தது
துகடீ ரிருந்தவத் துணிவின் முற்றி
முகடுய ருலக முன்னிய முனிவரும்
கண்டாற் கண்டவாங் கதிர்ப்பின வாகித்
தண்டாப் பெருந்துயர் தருமிவள் கண்ணென
உண்மலி வுவகைய ளாகித் தன்மகள்
இனவளை யாயத் திளையர் கேட்பப்
புனல்விளை யாட்டினுட் போற்றுமின் சென்றென
ஓம்படைக் கிளவி பாங்குறப் பயிற்றி
ஆங்கவ ருள்ளு மடைக்கல நினக்கெனக்
காஞ்சன மாலைக்குக் கைப்படுத் தொழிந்தபின்
ஏற்ற கோலத் தியம்புங் கிண்கிணி
நூற்றுவர் தோழியர் போற்றியல் கூறத்
தெய்வச் சுற்றத்துத் திருநடந் ததுபோற்
பையென் சாயலொடு பாணியி னொதுங்கி
உறைத்தெழு மகளிரொடு தலைக்கடை சார்தலும்
யவனக் கைவினை யாரியர் புனைந்தது
தமனியத் தியன்ற தாமரை போலப்
பவழமு மணியும் பல்வினைப் பளிங்கும்
தவழ்கதிர் முத்துந் தானத் தணிந்தது
விலைவரம் பறியா வெறுக்கையுண் மிக்க
தலையள வியன்றது தனக்கிணை யில்லது
தாயொடு வந்த தலைப்பெரு வையம்
வாயின் முற்றத்து வயங்கிழை யேறப்
பாத பீடிகை பக்கஞ் சேர்த்தலும்
செந்நூல் விசித்த நுண்ணுக நுழைந்த
இலக்கணப் பாண்டியம் வலத்தி னெற்றிக்
கண்ணி பரிந்து கடிக்குளம் பிளகலும்
பண்ணிய வையம் பள்ளி புகுகென
மூதறி பாக னேற லியையான்
இலக்கண மின்றென விலக்கினன் கடிய