ஆடகப் பொற்கவ றணிபெறப் பரப்பிக் கூடங் குத்திய கொழுங்காழ்க் கேற்ப நாசிகைத் தானத்து நகைமுத் தணிந்து மாசறு மணிக்கான் மருப்புக் குடமிரீஇ அரக்குருக் கூட்டிய வரத்தக் கஞ்சிகைக் கரப்பறை விதானமொடு கட்டி லுடையது கோதை புனைந்த மேதகு வனப்பின் மல்லர் பூண்ட மாடச் சிவிகை பல்வளை யாயத்துப் பைந்தொடி யேறலும் செய்யோ ளமர்ந்த செம்பொற் றாமரை வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல மெல்லியன் மாதரை யுள்ளகம் புகுத்தி மல்லற் பெருங்கிளை செல்வுழிப் படர முனிவ ராயினு மூத்தோ ராயினும் எனையீர் பிறரு மெதிர்வரப் பெறீரென வானுறை யுலகினும் வையக வரைப்பினும் தான விளைவினுந் தவத்தது பயத்தினும் எண்ணரும் பல்லுயி ரெய்தும் வெறுக்கையுட் பெண்டிருண் மிக்க பெரும்பொரு ளின்மையின் உயிரெனப் படுவ துரிமை யாதலிற் செயிரிடை யிட்டது செல்வன் காப்பென ஆறுகடி முரச மஞ்சுவரக் கொட்டிக் காவ லாளர் காற்புறஞ் சுற்றப் புயன்மலை தொடுத்துப் பூமலர் துதைந்து வியன்கா மண்டிய வெள்ளம் போல மாட மூதூர் மறுகிடை மண்டிக் கோடுற நிவந்து மாதிரத் துழிதரும் கொண்மூக் குழாத்திற் கண்ணுற மயங்கி ஒண்ணுதன் மகளி ரூர்தி யொழுக்கினம் புள்ளொலிப் பொய்கைப் பூந்துறை முன்னித் தண்பொழில் கவைஇய சண்பகக் காவிற் கண்டோர் மருளக் கண்டத் திறுத்த விழாமலி சுற்றமொடு வெண்மண லேறி நாளத் தாணி வாலவை நடுவண் நிரந்தநீர் விழவினு ளிரந்தோர்க் கீக்கெனப் பன்னீ ராயிரம் பசும்பொன் மாசையும் குவளைக் கண்ணியுங் குங்குமக் குவையும் கலிங்க வட்டியுங்

|