கலம்பெய் பேழையும் பொறியொற் றமைந்த குறியொடு கொண்ட உழைக்காப் பாள ருள்ளுறுத் தியன்ற இழைக்கல மகளி ரிருநூற் றுவரொ டியாழறி வித்தகற் கூர்தி யாவது கண்டுகொண் மாத்திரை வந்தது செல்கெனத் தனக்கென் றாய்ந்த தலையிரும் பிடிகளுள் இலக்கணக் கரும மெட்டா முறையது மதியோர் புகழ்ந்த மங்கல யாக்கையொடு விதியோர் கொளுத்திய வீரிய முடையது சேய்ச்செல னோன்பரிச் சீலச் செய்தொழிற் பூச்செய் கோலத்துப் பொலிந்த பொற்படை மத்தக மாலையொடு மணமகள் போல்வ துத்தரா பதத்து மொப்புமை யில்லாப் பத்திரா பதியே பண்ணிச் செல்கென உதயண குமரற் கியைவன பிறவும் உழைக்கல மெல்லாந் தலைச்செல விட்டு வல்லே வருகவில் லாளன் விரைந்தென விட்ட மாற்றம் பெட்டனன் பேணிச் சென்ற காட்சிச் சிவேதனைக் காட்டிப் பொன்னறை காவலர் பொறிவயிற் படுகெனச் செண்ண மகளிர் செப்பிற் காட்டிய வண்ணஞ் சூட்டின கண்ணியிற் கிடந்த பனிப்பூங் குவளை பயத்தின் வளர்த்த தனிப்பூப் பிடித்த தடக்கைய னாகி நெடுநிலை மாநகர் நில்லான் போதந் திடுமணன் முற்றத் திளையரு ளியன்று படுமணி யிரும்பிடிப் பக்க நண்ணிப் பொலிந்த திருவிற் பொற்புடைத் தாகி மலிந்த யாக்கையின் மங்கல மிக்கதன் வனப்பிற் கொவ்வா வாழ்விற் றாகி வாழ்நா ளற்ற வகையிற் றாயினும் கணைச்செல வொழிக்கும் கடுமைத் திதுவென மனத்திற் கொண்ட மதிய னாகிக் கண்டே புகன்ற தண்டா வுவகையன் தாரணி யிரும்பிடி தலைக்கடை யிரீஇ ஏரணி யெருத்த மிறை

|