மக னேறலும் தூய்மை யின்றென மாநிலத் தியங்காக் கடவு ளியக்கங் கற்குவ போலக் குளம்புநில னுறுத்தலுங் குறையென நாணிக் கதழ்ந்துவிசை பரிக்குங் கால வாகி உரத்தகைப் பொற்றா ரரற்று மார்ப்பிற் பந்துபுடை பாணியிற் பொங்குமயிர்ப் புரவி மருங்கிரு மணிப்புடை நிரந்துடன் மிளிர நான்முகங் கவைஇய வான்செய் பச்சைய தானச்செங் கோட்டுத் தோன்மணைப் படுத்த சித்திரத் தவிசிற் செறிந்த குறங்கிற் பொற்றொடர் பொலிந்த பூந்துகிற் கச்சைய கத்திகை சிதர்மணி கட்கத்துத் தெரிப்ப வித்தக நம்பியர் பக்கத்து வலித்த கானத்துக் குலைந்த கவரி யுச்சிய தானைத் தலைப்படை பாணியிற் பரிப்ப அச்செறி புலவ ரளவுகொண் டமைத்துக் கட்க நுனித்த கடைக்கட் டிண்ணுகம் கொய்சுவ லிரட்டை மெய்யுறக் கொளீஇ ஒட்டிடை விட்ட கட்டின வாயினும் ஒன்றிநின் றியங்காச் சென்றிடை கூடுவ மாயங் காட்டுநர் மறையப் புணர்ந்த கோவை நாழிகைக் கொழூஉக்கண் கடுப்ப வடுச்சொ னீங்கிய வயங்கிய வருணத் திடிச்சொற் பொறாஅ விலக்கண வினையர் உள்ளுறக் கோத்த வள்புகொள் வலித்தொழிற் பாகர் நின்ற பண்ணமை நெடுந்தேர் ஆக........................புறஞ்சுற்றக் காலியற் புரவியொடு களிறுபல பரப்பிப் பால குமரர் படையகப் படுப்ப உருவச் செங்கொடி தெருவத்துப் பரப்பிச் செருமிகுந் தாமமொடு சேனையிற் கூடி மன்னவ னிருந்த தண்பொழிற் காவிற் சென்றிறுத் தனரா னம்பிய ரொருங்கென் நம்பியர் கூடிய நாளவை மருங்கிற் கம்பலைப் பந்தர்க் காழகில் கழுமிய திருநா ளிருக்கைத் திறல்கெழு வேந்தன் பெருநீ ராட்டணி

|