பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   51
Zoom In NormalZoom Out


 

பெட்கும் பொழுதெனச்
செம்பொற் படத்துப் பேறுவலித் திருந்த
மங்கலக் கணிகண் மாதிர நோக்கிப்
புரைமீன் கூடிய பொழுதியல் கூற
இருப தியானையு மெண்பது புரவியும்
அருமணி மான்றே ரையைந் திரட்டியும்
ஒருநூ றாயிரத் தொருகழஞ் சிறுத்த
தமனிய மாசையொடு தக்கணை யுதவிக்
கடவது நிறைந்த தடவளர் செந்தீ
ஒடியாக் கேள்விப் பெரியோ ரீண்டிய
படிவக் குழுவினு ளடிமுதல் வணங்கி
ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென
மாசை வாரி மன்னவ னாடி
அறிநர் தானத் தாயிரம் பொற்பூக்
கருவிநிலைப் பள்ளிக்குத் தொழுதனன் போக்கிச்
சுண்ணம் விரவிய சுரியிரும் பித்தைக்
கண்ணி நெற்றி வெண்சூட் டேற்றித்
தூத்துகி லுடுத்துத் தொடியுடைத் தடக்கைக்
கோத்தொழி லிளையர் பூப்பலி கொடுத்துச்
செம்பொ னெல்லின் செல்கதிர் சூட்டி
வெண்டுகி லிட்ட விசய முரசம்
பண்டிய லமைந்த படுகட னெல்லாம்
தண்டொழிற் செங்கோ றலைத்தலை சிறக்கென
வெந்திறல் வேந்தன் விட்டிவை கூறக்
கண்டொரு பாணியிற் கடல்கிளர்ந் ததுபோற்
பல்படை மொய்த்த மல்லற் பெருங்கரை
மழைமலைத் தன்ன மாணிழை மிடைந்து
வம்புவிசித் தியாத்த செம்பொற் கச்சையர்
மாலை யணிந்த கோல்செய் கோலத்துப்
பூப்போ துறுத்த மீப்பொற் கிண்கிணி
இடுமணிப் பெருநிரை நெடுமணிற் கிடைஇ
இரும்புறம் புதைய வெழின்மறைந் திருந்த
கருங்காற் கானத்துக் கண்மணிக் குழாத்திடை
ஏற்றரி மாவின் றோற்றம் போல
மின்னிழை மகளிரொடு மன்னவன் றோன்றி
விசைய வேழத் திசையெருத் தேற்றிப்
பெருவிறல் வேந்தன் சிறுவரை