சாலையு மருந்தவர் பள்ளியும் தந்தற மருங்கிற் றலைவைப் போரும் நிலம்பெய் வோரு நிதிபெய் வோரும் களிறுபெய் வோரும் பரிபெய் வோரும் பெய்வோர் பெய்வோர் பெயர்வறக் குழீஇக் கொள்வோ ரறியாக் குரல ராகி மணற்கெழு பெருந்துறை மயங்குபு தழீஇ வனப்பொடு புணர்ந்த வகையிற் றாகிப் புனற்பாற் பட்டன்றாற் பூநகர் புரிந்தென் புரிந்த சுற்றமொடு புணர்ந்துடன் கெழீஇ விரிநீர்ப் பொய்கையுள் விளையாட்டு விரும்பிய மறுநீங்கு சிறப்பின் மதிலுஞ் சேனை நறுநீர் விழவி னாளணி கூறுவென் பனையும் வெதிரும் பாசிலைக் கமுகும் இனையன பிறவும் புனைவனர் நாட்டிக் கிடையும் பீலியு மிடைவரித் தழுத்தி மிடைவெண் டுகிலி னிடைநிலங் கோலி அரிச்சா லேகமு மார வள்ளியும் கதிர்ச்சா லேகமுங் கந்துங் கதிர்ப்ப வம்பப் படத்துப் பொன்னுருக் கூட்டி அள்ளிலை வாழை யகம்போழ்ந் திறுத்த வெள்ளி வெண்டிரள் வேண்டிடத் தூன்றிக் கட்டளை நாசியொடு கபோதங் காட்டி எட்டிறை யெய்திய விலக்கணக் காட்சி ஏரணி யமைந்த வெழுநில நல்வினை நீரணி மாடத்து நிலாநெடு முற்றத் தரிப்பொற் கிண்கிணி யார்ப்ப வியலிக் கருங்கண் மகளிர் கைபுடைத் தோப்ப இருங்கண் விசும்பக மிறகுறப் பரப்பிக் கருங்கயல் கொண்ட கவுள வாகிப் பொங்கிரும் புன்னைப் பூம்பொழின் முன்னிச் செங்கா னாரை செல்வன காண்மின் சாந்தரை...........யன கூலப் பெருங்கடை ஈண்டிய மாதரை யீண்டிடந் தம்மினெம் பூங்குழை மாதர் புனலகம் புக்கனள் ஆங்கியன் றவளைத் தாங்கு

|