பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   54
Zoom In NormalZoom Out


 

ந ரில்லெனக்
கூந்த னறுமண் சாந்தொடு கொண்டு
நானச் செப்பொடு கூன்பின் றுளங்கப்
பெருங்கோ நங்கை பெட்ப வேறிய
இருங்கை யிளம்பிடி கடச்செருக் கெய்திக்
கடிற்றுப் பாகன் கைப்புழிச் செல்லாது
தொடிக்கை மகளிர் நீர்குடை வெரீஇய
நெட்டிரும் பொய்கைக் குட்ட மண்டி
ஒளிச்செந் தாமரைப் பாசடைப் பரப்பிற்
களிக்கய லிரியக் குளிப்பது காண்மின்
ஞாழற் படுசினை தோழியர் நூக்க
ஆம்பற் பரப்பிற் பாய்ந்த பைந்தொடி
செண்ணச் சிகழிகைப் பின்னிடை சேர்ந்த
பொன்னரி மாலைதன் புறம்பிடைப் புடைப்பச்
செற்றப் புதவு குத்தி வாங்கிக்
கொழுநன் கூந்தல் கொண்டெனக் கருதிக்
கழுநீ ருண்கட் கடையி னோக்கி
அன்மையி னழுங்கிய நன்னுத லுவப்ப
வள்ளிலைப் பரப்பின் வள்பெறிந் தன்ன
துள்ளியல் வட்டிகை துடுப்பிற் கடைஇ
உள்வழி யுணரா துழிதருங் கணவன்
நனிபெருங் காதலொடு நண்ணுவழி யடையப்
பனிவா ருண்கண் பைதன் மறைய
முகிழ்ந்துவீங் கிளமுலை முத்திடை நாற்றிக்
கவிழ்ந்தெருத் திறைஞ்சுமோர் காரிகை காண்மின்
நீலக் குவளை நிரையித ழுடுத்த
கோலப் பாசடைப் பால்சொரிந் தன்ன
தூவெள் ளருஞ்சிறைச் சேவலொ டுளரிப்
பள்ளி யன்னம் பகலிற் றுயிலா
வெள்வளை மகளிர் முள்குவநர் குடையும்
நீரொலி மயக்கிய வூர்மலி பெருந்துறைக்
கடற்றிரைக் கண்டங் கானற் குத்தி
மடற்பனை யூசலொடு மாட மோங்கிய
உருவ வெண்மணற் பெருவெண் கோயிலுட்
செம்பொற் கிண்கிணிச் சேனா பதிமகள்
கம்பற் சுற்றமொடு கன்னியர் காப்பப்
பைந்தொடிக் கோமா ணங்கையர் நடுவண்
வண்டுள ரைம்பால்