பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   55
Zoom In NormalZoom Out


 

வாசவ தத்தை
அரைச மங்கைய ராயமொடு கெழீஇ
நிரைவெண் மாடத்து நீரணி காணிய
போதரு மென்னுங் காதலின் விரும்பிப்
பெருங்காற் புன்னைக் கருங்கோட் டணைத்த
நாவாய் பண்ணு மாவிறன் மள்ளர்க்குக்
கள்ளடு மகடூஉக் கைசோர்ந் திட்ட
வெள்ளி வள்ளம் பல்லுறக் கவ்விக்
கூடக் கூம்பி னீடிர ளேறி
உச்சிக் கிவருங் கட்கின் கடுவன்
வீழ்ந்த தங்களை விசும்புகொண் டேறும்
தெய்வ மகாஅரி னையுறத் தோன்றித்
துள்ளுபு திரிதருந் தோற்றங் காண்மின்
சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன்
அழனறுந் தேற லார மாந்திக்
காழக மீக்கொண் டாழுந் தானையன்
வாழ்க வாழ்கவெம் மதிலுஞ் சேனை
மட்டுண் மகளிர் சுற்றமொடு பொலிகெனத்
துட்டக் கிளவி பெட்டவை பயிற்றிக்
கட்பகர் மகடூஉக் கட்குடை யோசையும்
கன்னமர் பள்ளிக் கம்மிய ரிடிக்கும்
பன்மலர்க் காவி னம்மனை வள்ளையும்
குழலும் யாழும் மழலை முழவமும்
முட்டின் றியம்பும் பட்டின மொரீஇத்
துறக்கங் கூடினுந் துறந்திவ ணீங்கும்
பிறப்போ வேண்டேன் யானெனக் கூறி
ஆர்த்த வாய னூர்க்களி மூர்க்கன்
செவ்வழிக் கீதஞ் சிதையப் பாடி
அவ்வழி வருமோ ரந்த ணாளனைச்
செல்ல லாணை நில்லிவ ணீயென
எய்தச் சென்று வைதவண் விலக்கி
வழுத்தினே முண்ணுமிவ் வடிநறுந் தேறலைப்
பழித்துக் கூறுநின் பார்ப்பனக் கணமது
சொல்லா யாயிற் புல்லுவென் யானெனக்
கையலைத் தோடுமோர் களிமகற் காண்மின்
பல்காசு நிரைஇய வல்குல் வெண்டுகில்
ஈரத் தானை நீரிடைச் சோரத்
தோட்டார் திருநுதற்