சூட்டயற் சுடரும் சுட்டி சிதையக் குட்டத்துக் குளித்து மகர குண்டல மறிந்துவில் வீசக் கிளரும் பாசிழைக் கிண்கிணிக் கணைக்கால் அஞ்செஞ் சீறடி யஞ்சுவர வோடி நிரைவளை மகளிர் நீர்குடை வொரீஇப் புரைபூங் கொண்டையிற் புகைப்பன காண்மின் கருங்காற் புன்னையொ டிருங்கரும் புடுத்து நாணல் கவைஇய கான லொருசிறை மகிழ்பூ மாலையொடு மருதிணர் மிடைந்த அவிழ்பூங் கோதையொ டவிரிழை பொங்க எக்கர்த் தாழை நீர்த்துறைத் தாழ்ந்த நெடுவீ ழூசன் முடிபிணி யேறித் தொடுவேன் முற்றத்துத் தோழியொ டாடாப் பட்டியல் கண்டத்துப் பலர்மனங் கவற்றவோர் எட்டி குமர னினிதி னியக்கும் இன்னொலி வீணைப் பண்ணொலி வெரீஇ வஞ்சிக் கொம்பர்த் துஞ்சரித் துளரி ஒளிமயிர்க் கலாபம் பரப்பி யிவ்வோர் களிமயில் கணங்கொண் டாடுவன காண்மின் அதிரல் பரந்த வசோகந் தண்பொழில் மணிக்கயத் தியன்ற மறுவி றண்ணிழல் பனிப்பூங் குவளையொடு பாதிரி விரைஇ வேதிகை யெறிந்த வெண்மணற் றிண்ணைப் பாலிகைத் தாழியொடு பல்குட மிரீஇ முந்நீர்ப் பந்தர் முன்கடை நாட்டி வரைவின் மாந்தர்க்குப் புரைபதம் பகரும் கலம்பூச் சரவத் திலஞ்சி முற்றத்துக் கருப்புக் கட்டியொடு தருப்பணங் கூட்டி நெய்ச்சூட் டியன்ற சிறுப லுண்டி நகைப்பத மிகுத்த கைய ராகித் தொகைக்கணம் போதரு மறச்சோற் றட்டில் தளையுலை வெந்த வளைவா லரிசி வண்ணப் புழுக்க லுண்ணாது சிதறி ஊட்டெமக் கீத்த கோப்பெருந் தேவி முன்ன ராக முன்னுமின் கொண்டெனத் தலைப்பெரு மடை

|