| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
| ஓலை எண் : 1 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 1. | வென்றான் வினையின் றொகையாய விரிந்து தன்கண் ஒன்றாய்ப் பரந்த வுணர்வின் னொழியாது முற்றும் சென்றான் றிகழுஞ் சுடர் சூழொளிமூர்த்தி யாகி நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார். |
| 2. | அங்கண் ணுலகிற் கணிவான் சுடராகி நின்றான் வெங்கண் வினைபோழ்ந் திருவச்சரண் சென்ற மேனாட் பைங்கண் மதர்வைப் பகுவா யரியேறு போழ்ந்த செங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன். |
| 3. | கொற்றங்கொ ணேமி நெடுமால் குணங்
கூறவிப்பால் உற்றிங்கொர் காதல் கிளரத் தமிழ்நூற்க லுற்றேன் மற்றிங்கொர் குற்றம் வருமா யினுநங்கள் போல்வார் அற்றங்கள் காப்பா ரறிவிற் பெரியார்க ளன்றே. |