| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 2 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 4. | நாமாண் புரைக்குங் குறையென்னினு நாம வென்வேல் தேமா ணலங்கற் றிருமா னெடுஞ் சேந்த னென்னுந் தூமாண் டமிழின் கிழவன் சுடரார மார்பிற் கோமா னவையுட் டெருண்டார்கொளப் பட்ட தன்றே. |
| 5. | செங்கண் ணெடியான் றிறம்பேசிய சிந்தை செய்த நங்கண் மறுவு மறுவன்று நல்லார்கண் முன்னர் அங்கண் விசும்பி னிருள்போழ்ந் தகல்வா னெழுந்த திங்கண் மறுவுஞ் சிலர்கை தொழச்செல்லு மன்றே. |
| 6. | விஞ்சைக் கிறைவன் விரைசூழ் முடிவேந்தன் மங்கை பஞ்சிக் கனுங்குஞ் சிலம்பா ரடிப்பாவை பூவார் வஞ்சிக் கொடிபோல் பவள்கா ரணமாக வந்த செஞ்சொற் புராணத் துரையின்வழிச் சேறுமன்றே. |