| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 5 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| லாம். | |
| 15. | அணங்க னாரன வாடன் முழவமும் கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும் மணங்கொள் வார்முர சும்வய லோதையும் இணங்கி யெங்கு மிருக்குமொர் மாடெலாம். |
| 16. | கலவ ரின்னி யமுங்கட லச்சிறார் புலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும் நிலவு வெண்மண னீளிருங் கானல்வாய் உலவு மோதமு மோங்குமொர் பாலெலாம். |
| 17. | கைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை மைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண் மெய்வி ரிந்தன வேங்கையுஞ் சோர்ந்ததேன் நெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம். |
| 18. | கொன்றை யுங்குருந் துங்குலைக் கோடலும் முன்றி லேறிய முல்லையம் பந்தரும் நின்று தேனிரந் தூத விரிந்தரோ மன்றெ லாமண நாறு மருங்கினே. |
| 19. | நாற விண்டன நெய்தலு நாண்மதுச் சேறு விண்டசெந் தாமரைக் கானமும் ஏறி வண்டின மூன்ற பிலிற்றுதேன் ஊறி வந்தொழு கும்மொரு பாலெலாம். |