சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   6
Zoom In NormalZoom Out

20.கோடு டைந்தன தாழையுங் கோழிருள்
மோடு டைந்தன மூரிக் குவளையும்
தோடு டைந்தன வாம்பலுங் கற்பகக்
காடு டைந்தன போன்றுள கானலே.
 
21.நீல வால வட்டத்தினி றங்கொளக்
கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல்
ஆலு மாமழை நீண்முகி லார்த்தொறு
மாலு மாமயி லாலுமொர் பாலெலாம்.
 
22.நக்க முல்லையு நாகிளங் கொன்றையும்
உக்க தாதடர் கொண்டாலி வண்டறா
எக்கரீர்மணற் கிண்டி யிளம்பெடைப்
பக்க நோக்கும் பறவையொர் பாலெலாம்.
 
23.துள்ளி றாக்கவுட் கொண்டு சுரும்பொடு
கள்ள றாதசெந் தாமரைக் கானகத்
துள்ள றாதுதைந் தோகை யிரட்டுறப்
புள்ள றாது புலம்பின பொய்கையே.
 
24.வெண்மு ளைப்ப