சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   7
Zoom In NormalZoom Out

சுந் தாமரைச் செஞ்சுருள்
முண்மு ளைத்திர ளோடு முரிந்துகொண்
டுண்மு ளைத்திள வன்ன முழக்கலால்
கண்மு ளைத்த தடத்த கழியெலாம்.
 
25.காந்த ளங்குலை யாற்களி வண்டினம்
கூந்த லம்பிடி வீசக் குழாங்களோ
டேந்து சந்தனச் சார லிருங்கைம்மா
மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம்.
 
26.தார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண்
டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக்
கார்செய் காலை கறித்தொறு மெல்லவே
போர்செய் மாவின பூத்தண் புறணியே.
 
27.அள்ளி லைக்குவ ளைத்தட மேய்ந் தசைஇக்
கள்ள லைத்த கவுட்கரு மேதிபால்
உள்ள லைத்தொழு கக்குடைந் துண்டலாற்
புள்ள லைத்த புனல புலங்களே.
 
28.கெண்டை யஞ்சினை மேய்ந்து கிளர்ந்துபோய்
முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா
வண்டல் வார்கரை மாமக ரக்குழாம்
கண்டு நின்று கனலுங் கழியெலாம்.