| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 8 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 29. | கண்ணி
லாங்கழை யின்கதிர்க் கற்றையு மண்ணி லாங்குரல் வார்தினை வாரியும் எண்ணி லாங்கவி ளைவன வீட்டமும் உண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே. |
| 30. | பேழ்த்த காயின பேரெட்
பிறங்கிணர் தாழ்த்த காயின தண்ண வரைக்கொடி சூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை மூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே. |
| 31. | மோடு
கொண்டெழு மூரிக் கழைக்கரும் பூடு கொண்ட பொதும்பரொ டுள்விராய்த் தோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின் காடு கொண்டுள கண்ணக னாடெலாம். |
| 32. | சங்கு
நித்தில முந்த வழிப்பியும் தெங்கந் தீங்குலை யூறிய தேறலும் வங்க வாரியும் வாரலை வாரியும் தங்கு வாரிய தண்கட னாடெலாம். |
| 33. | கொடிச்சியர்
புனத்தயற் குறிஞ்சி நெய்பகர் இடைச்சியர் கதுப்பயற் கமழு மேழையங் கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த் தொடுத்தலர் பிணையலார் குழலுட் டோன்றுமே. |