சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   20
Zoom In NormalZoom Out

யினன் பெரிய நம்பியே.
 
77.பூவையம் புதுமலர் புரையு மேனியன்
தூவிரி தாமரை தொலைத்த கண்ணினன்
தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன்
மாவிரி திருமறு வணிந்த மார்பினன்.
 
78.செங்கயல் வலம்புரி திகிரி யென்றிவை
தங்கிய வங்கைய னடித்தண் போதினன்
மங்கல மழகளி றனைய செல்கையன்
இங்குமுன் மொழிந்தவற் கிளைய நம்பியே.
 
79.திருவிளைத் துலகுகண் மலரத் தெவ்வர்தம்
புரிவளை நன்னகர்ச் செல்வம் புல்லென
வரிவளைத் தோளியர் மனத்துட் காமநோய்
எரிவளைத் திடுவதோ ரிளமை யெய்தினார்.
 
80.உவர்விளை கடற்கொடிப் பவள மோட்டிய
துவரிதழ் வாயவர் துளங்கு மேனியர்
அவர்கடம் மருள்கொலோ வனங்க னாய்மலர்
கவர்கணை கடைக்கணித் துருவு காட்டினார்
 
81.கடலொளி மணிவணன் கனவில் வந்தெம
துடலகம் வெறுவிதா யுள்ளம் வவ்வினான்