| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 27 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 105. | உற்றதன் னொழுக்கிற் கேற்ப வுலகுப சார
நீக்கி்க் கொற்றவன் குறிப்பு நோக்கி யிருந்தபின் குணக்குன் றொப்பான் முற்றிய வுலகின் மூன்று காலமு முழுது நோக்கிக் கற்றநூற் புலமை தன்னைக் காட்டுதல் கருதிச் சொன்னான். |
| 106. | கயந்தலைக் களிற்றி னாயோர் கனாக்கண்ட துளது
கங்குல் நயந்தது தெரியி னம்பி நளிகடல் வண்ணன் றன்னை விசும்பகத் திழிந்து வந்தோர் வேழம்வெண் போது சேர்ந்த தயங்கொளி மாலை சூட்டித் தன்னிட மடைந்த தன்றே. |
| 107. | மன்மலர்ந்
தகன்ற மார்ப மற்றதன் பயனுங் கேட்பின் நன்மலர் நகைகொள் கண்ணி நம்பிதன் னாம மேத்தி மின்மலர்ந் திலங்கு பைம்பூண் விஞ்சைவேந் தொருவன் வந்து தன்மக ளொருத்தி தன்னைத் தந்தனன் போகு மென்றான். |
| 108. | கட்பகர்
திவலை சிந்துங் கடிகமழ் குவளைக் கண்ணித் திட்பமாஞ் சிலையி னாய்!நீ தெளிகநா ளேழு சென்றால் ஒட்பமா யுரைக்க வல்லா னொருவனோ ரோலை கொண்டு புட்மா கரண்ட மெ |