| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 31 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 119. | புரிசை நீண்மதிற் போதன
மாநகர் அரைசர் வார்த்தையவ் வாறது நிற்கவே விரைசெய் வார்பொழில் விஞ்சையர் சேடிமேல் உரையை யாமுரைப் பானுற நின்றதே. |
| 120. | நிலவு
வெண்சுடர் பாய்நில மொப்பநீண் டுலவு நீள்கட றீண்டி யுயர்ந்து போய் மலர வின்மணி வானவின் மாடெலாம் விலகி நின்றது விஞ்சையர் குன்றமே. |
| 121. | தொக்க
வானவர் சூழ்குழ லாரொடும் ஒக்க வாங்குள ராய்விளை யாடலால் உக்க சோதிகள் சோலையி னூடெலாம் செக்கர் வானக முஞ்சிறி தொக்குமே. |
| 122. | அவிழுங்
காதல ராயர மங்கையர் பவழ வாயமு தம்பரு கிக்களி தவழு மென்முலை புல்லத் ததைந்ததார் கமழ நின்றன கற்பகச் சோலையே. |
| 123. | கிளருஞ்
சூழொளிக் கின்னர தேவர்தம் வளரும் பூண்முலை யாரொடு வைகலால் துளருஞ் சந்தனச் சோலைக ளூடெலாம் நளிருந் நெய்வ நறுங்குளிர் நாற்றமே. |
| 124. | மங்குல் வாடை |