சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   32
Zoom In NormalZoom Out

மந் தார்வான் மீதுழாய்ப்
பொங்கு தாதொடு பூமதுக் கொப்பளித்
தங்க ராகம ளாவியர் மங்கையர்
கொங்கை வாரிகள் மேற்குதி கொள்ளுமே.
 
125.தேன கத்துறை யுஞ்செழுஞ் சந்தனக்
கான கத்தழை யின்கமழ் சேக்கைமேல்
ஊன கத்தவர் போகமு வந்தரோ
வான கத்தவர் வைகுவர் வைகலே.
 
126.மஞ்சு தோய்வரை மைந்தரொ டாடிய
அஞ்சி லோதிய ராரள கப்பொடி
பஞ்ச ராகம் பதித்த பளிக்கறைத்
துஞ்சு பாறைகள் மேற்றுதை வுற்றதே.
 
127.மாத ரார்நடை கற்கிய வானிழிந்
தூது வண்டுண வூழடி யூன்றிய
பாத ராகம் பதித்த பளிக்கறை
காத லாரன கண்கவர் கின்றவே.
 
128.ஆகு பொன்னறை மேலரு வித்திரள்
நாக கன்னிய ராடலின் ஞால்கைம்மா
வேக மும்மத வெள்ள மளாவிய
போக மல்லிகை நாறும் புனல்களே.
 
129.பூக்க ளாவன பொன்மரை பூம்பொழில்
காக்க ளாவன கற்பகச் சோலைகள்
வீக்கு வார்கழல் விஞ்சையர் சேடிமேல்
ஊக்கி யாமுரைக் கின்றதிங் கென்கொலோ.