சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   36
Zoom In NormalZoom Out

நம்பி யாள்கின்ற நாளி னடுங்கின
கம்ப மாடக் கதலிகை போலுமே.
 
142.மின்னு வார்ந்தமந் தார விளங்கிணர்
துன்னு தொன்முடி யானொளி சென்றநாண்
மன்னு மாடவர் மேல்வளைந் திட்டன
பொன்ன னார்புரு வச்சிலை போலுமே.
 
143.வெண்ணி லாச்சுட ருந்தனி வெண்குடை
எண்ணி லாப்புக ழானினி தாண்டநாள்
உண்ணி லாப்பல வாயுள வாயின
கண்ண னாரொடு காமக் கலங்களே.
 
144.மாக்கண் வைய மகிழ்ந்துதன் றாணிழல்
நோக்கி வைக நுனித்தவ னாண்டநாள்
தாக்க ணங்கனை யார்தம தாயரால்
வீக்கப் பட்டன மென்முலை விம்முமே.
 
145.வடிய வாளவ னாளவும் வாய்களில்
கடிய வாயின கள்ளவிழ் தேமலர்
அடிய வாய்ப்பயப் பட்டடங் காவலர்க்
கொடிய வாயின கொங்கவிழ் சோலையே.
 
146.மாய மாயநின் றான்வரை மார்பிடை
மேய பூமகள் போல