| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 37 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| விளங்கினாள் தூய வாமுறு வற்றுவர் வாயவள் வாயு வேகையென் பாள்வளர் கொம்பனாள். | |
| 147. | பைம்பொற்
பட்ட மணிந்தகொல் யானையான் நம்பப் பட்ட நறுங்குழ லார்க்கெலாம் செம்பொற் பட்டஞ் செறிந்த திருநுதல் அம்பொற் பட்டுடை யாளணி யாயினாள். |
| 148. | கோவை வாய்க்குழ
லங்குளிர் கொம்பனாள் காவி வாணெடுங் கண்ணியக் காவலற் காவி யாயணங் காயமிழ் தாயவண் மேவு நீர்மைய ளாய்விருந் தாயினாள். |
| 149. | முருக்கு வாயவண் முள்ளெயிற்
றேர்நகை உருக்க வேந்த னொருங்குறை கின்றநாள் பெருக்க மாகப் பிறந்தனன் பெய்கழல் அருக்க கீர்த்தியென் பானலர் தாரினான். |
| 150. | நாம
நல்லொளி வேனம்பி நங்கையாய் ஏம நல்லுல கின்னிழிந் தந்நகைத் தாம மல்லிகை மாலைச் சயம்பவை காம வல்லியுங் காமுறத் தோன்றினாள். |
| 151. | கங்கை நீரன ஞான்ற
கதிரிளந் திங்க ளா |