சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   40
Zoom In NormalZoom Out

ண்டவே.
 
159.நங்கை தோன்றிய பின்னகை வேலினாற்
கங்கண் ஞால மமர்ந்தடி மைத்தொழில்
தங்க நீண்முடி யாற்றலை நின்றனர்
வெங்கண் யானை விளங்கொளி வேந்தரே.
 
160.நங்கைதான் வளர்ந்து காம நறுமுகை துணர வைத்து
மங்கையாம் பிராய மெய்தி வளரிய நின்ற நாளுள்
பைங்கண்மால் யானை யாற்குப் பருவம்வந் திறுத்த
                                     தென்றாள்
வங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்தமா திலகை யென்பாள்.
 
161.தேங்குலா மலங்கன் மாலைச் செறிகழன் மன்ன போற்றி!
பூங்குலாய் விரிந்த சோலைப் பொழிமதுத் திவலை தூவக்
கோங்கெலாங் கமழ மாட்டாக் குணமிலார் செல்வ மேபோல்
பாங்கெலாஞ் செம்பொன் பூப்ப விரிந்தது பருவ மென்றாள்.
 
162.வேய்ந்திண ரொசிந்த சோலை வேனிலான் வென்றி
                                      யோகைத்
தேந்துணர் கொடுப்ப மூழ்கித் தேறல்வாய் நெகிழ மாந்தித்
தாந்துணர் துணையோ டாடிச் சாறுகொண் டூறு மேரார்
மாந்துண ரொசி