| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 42 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| துவர்த்தலின் மருங்கு
நீண்ட. பூஞ்சினை முருக்கஞ் சோலைப் பூக்கள்வா யார மாந்தித் தீஞ்சுவை மிழற்று கின்ற சிறுகுயில் செல்வ ரேனும் தாஞ்சுவை திரிந்த பின்றைச் சார்பவ ரில்லை யன்றே. | |
| 167. | கோவைவண் டூது கின்ற குரவெனுங் குழைகொண்
மாதர் பாவைகொண் டாடு கின்ற பருவத்தே பயின்ற காமன் ஆவிகொண் டிவளைக் கைவிட் டகலுமோ வென்று தத்தம் பூவையுங் கிளியுங் கொண்டு புலம்பின பொழில்க ளெல்லாம். |
| 168. | வயந்தமாங்
குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடும் உயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடும் கயந்தலைக் களிறுந் தேரும் வையமுங் கவின வேறி நயந்தன னகரி நீங்கி மனோவன நண்ணி னானே. |
| 169. | கோமான்சென் றணைதலுமே
கொங்கணிந்த மலர்தூவித் தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்ெ |