பல உருபு தொடர்ந்து அடுக்கி வருமாறு உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள். முதற்கண் நின்ற வேற்றுமை உருபே பொருளோடு, முடிதலன்றி, இறுதிக்கண்ணும் இடையின்கண்ணும் எல்லா உருபும் விரவிவந்து முடிக்கும் பொருண்மைக்கண்ணே நிலைபெறுதல் நீக்கார், எ - று.
நெறிபடுபொருள் என்பது முதலும் இடையும் இறுதியும் நின்ற பலவகை உருபிற்கும் ஏற்புடைப் பொருளை.
எ - டு. குயவன் குடத்தைத் திகிரியால் அரங்கின்கண் வனைந்தான் எனவும், சாத்தன் ஆடையை வலியினாற் காட்டின்கண் பறித்தான் எனவும் இறுதியும் இடையும் முதலும் நின்ற உருபெல்லாம் ஒரு வினையால் முடிந்தவாறு கண்டு கொள்க.
(19)