சொல்லும் மாறி நிற்கவும் பெறும் என்பது பெற்றாம்; என்னை? அவை இறுதியிற்றொகா என்றமையின். அவை மொழிமாறி நிற்குமாறு;- கடந்தான் நிலத்தை; வெட்டினான் வாளால்; கொடுத்தான் சாத்தற்கு; நீங்கினான் ஊரின், ஆடை சாத்தனது; இருந்தான் குன்றத்துக்கண் என்பன; இவற்றுள் உருபுதொக வந்தன;--கடந்தான் நிலம், இருந்தான் குன்றத்து என்பன என்னை? இவை உருபுதொக்கவழியுந் தம் பொருண்மை விளக்கின. ஏனையவும் இவ்வாறு வருமெனக் கருதின் அவை தம் பொருள் படாமையிற் றொகா என்றார். வெட்டினான் வாள்; கொடுத்தான் சாத்தன்; நீங்கினான் ஊர்; ஆடை சாத்தன் என்றவழித் தம்பொருள் படாமை கண்டுகொள்க. (21)
|