எல்லாவேற்றுமைக்கும் உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். வேற்றுமைச் சொற்கள் தத்த மரபிற் பொருணிலையை எதிர்மறுத்து மொழியினும் திரியா, எ - று.எ - டு. குடத்தை வனையான், சாத்தனொடு கூடான், அந்தணர்க்குக் கொடான், ஊரின் நீங்கான், சாத்தனதன்று ஆடை, குன்றத்துக்கண் இரான் எனவரும். குடத்தை வனையான் என்றவழிச் செயப்படுபொருள் தோன்றிற்றின்றாயினும், இவ்வாறு சொல்லப்பெறும் என வழுவமைத்தவாறு. (23)
|