உருபுகளுட் சில திரியு மெனல்
வேற்றுமை யுருபினுள் சிலவற்றிற்கு உரியதோர் திரிபு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். கு, ஐ, ஆன் என்று சொல்லப்பட்ட தொடர்மொழி இறுதிக்கண் வரும் உருபு, அவ்வொடும் சிவணும் செய்யுளகத்து, எ - று. உதாரணம் வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும்.
(24)