எய்தியது ஒருமருங்கு விலக்குதல் நுதலிற்று. இ - ள். அஃறிணைப் பொருட்கண் குவ்வும், ஐயும் அகரத்தொடு சிவணா, எ-று. எனவே, உயர்திணைக்கண் மூன்றுருபும் சிவணும் என்பதூஉம் அஃறிணைக்கண் ஓருருபு சிவணும் என்பதூஉம் கூறியவாறாம். எ - டு.2கடிநிலை யின்றே ஆசிரி யற்க; புள்ளினான; புலவரினான என வந்தன. ஐகாரம் அகரத்தோடு சிவணுமாறு வந்தவழிக் கண்டு கொள்க. பரிபாடலகத்து-நின்னொக்கும் புகழ் நிழலவை (பக்கம் 4) நீழ னேமியன என்பன அகரத்தோடு சிவணி வந்தன எனினும் அமையும். இவை அஃறிணைப் பொருள் அன்றோ எனின்; தெய்வப் பொருண்மையான் உயர்திணையாம். (25)
1. இளம்பூரணர் ‘அவற்றுள்’ என்ற தனிச்சொல்லுடன் இச்சூத்திரத்தை ஆள்வர். 2. தொல். புள்ளி. 94.
|