ஆகுபெயர்க்குப் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். எடுத்து ஓதப்பட்ட வாய்பாட்டான் அன்றி வேறு வருவனவும் எடுத்தோதிய நெறியினான் ஆகுபெயர் ஆமாறு அறிந்துகொள்க. எ-று. அவையாவன:--பாவை, திரு என்பன வடிவுபற்றியும்; பசு, கழுதை என்பன குணம் பற்றியும்; புலி, சிங்கம் என்பன தொழில் பற்றியும் ஒன்றன் பெயர் ஒன்றற்கு ஆகி வருவனவும் ஆகுபெயர் என்றே கொள்ளப்படும். 1எயின் முகம் சிதையத் தோட்டி ஏவலிற்--தோட்டி தந்த தொடிமருப் பியானை என்ற வழித் தோட்டியை யுடையானைத் தோட்டி என ஆகுபெயர் ஆயிற்று. இவை ஆகுபெயர் ஆகுங்கால் பாவை வந்தாள், சிங்கம் வந்தான் எனத் தத்தம் பொருண்மை வாய்பாட்டான் முடியும். (33) 2கவழக் களிப்பியன்மால் யானைசிற் றாளி தவழத்தா னில்லா ததுபோற்--பவழக் கடிகை யிடைமுத்தங் (காண்டொறு நில்லா தொடிகை யிடைமுத்தந் தொக்கு. |
என்றவழித் தொடியென்பது ஆகுபெயராயிற்று. வேற்றுமை மயங்கியல் முற்றும்.
1. பதிற்றுப். 38.
2. திணைமாலை நூற்றைம்பது, 42.
|