அதனை இவ்வியலில் உணர்த்துவாம் எனல்

116.

அவ்வே,
இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப.

எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தலை நுதலிற்று.

இ - ள். மேற்சொல்லப்பட்ட விளி வேற்றுமைதாம் இவையென அறிதற்கு உருபு பெறவும் கிளப்ப ஆசிரியர், எ - று.

உம்மை எஞ்சி நின்றது. இவ்விரண்டு சூத்திரத்தானும் சொல்லியது விளி வேற்றுமை வருவழி, அதனை ஏற்கும் பெயர் இயல்பாகியும் திரிந்தும் குறைந்தும் மிக்கும் வரும் என்றவாறு.

(2)