ஏனை உயிர் உயர்திணையில் விளியேலாமை
ஏனை உயிரே உயர்திணை மருங்கில் தாம்விளி கொள்ளா என்மனார் புலவர்.
ஐயந்தீர்த்தல் நுதலிற்று.
இ - ள். மேற் சொல்லப்பட்ட உயிரல்லாத உயிர்கள் உயர்திணையிடத்து வரின் விளி ஏலா, எ - று.
எ - டு. அவையாவன:--ஆடூஉ, மகடூஉ, நீ என்பன.
(6)