இகர ஈற்று அளபெடைப் பெயர் விளியேற்குமாறு
இகர ஈற்றுக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். அளபெடை மிக்க இகர ஈற்றுப் பெயர் இயற்கையவாகிய செய்தியை யுடைய, எ - று.
எ - டு. தோழீஇ என்பது விளிக்கண்ணும் அவ்வாறே வரும். செயற்கை என்றதனான் விளிக்கண் வரும் ஓசை வேறுபாடு அறிந்து கொள்க.
(7)