ஐகார வீற்று முறைப் பெயர்க்கண் வரும் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். முறைப் பெயர்க்கண் வரும் ஐகார ஈறு, ஆய் ஆகி வருதலன்றி, ஆ வோடு வருவதற்கு உரிய பெயரும் உள, எ - று. எ - டு. அன்னை என்பது அன்னாய் என வருதலேயன்றி, அன்னா எனவும் வரும். உம்மை இறந்தது தழீஇயிற்று. (8)
|