ஏனைப் புள்ளியீ றுகள் உயர்திணையில் விளி ஏலா எனல்

125.ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா.

ஐயமறுத்தலை நுதலிற்று.

இ - ள். உயர்திணைப் பொருட்கண் மேற் சொல்லப்பட்ட நான்கீற்றுப் பெயரும் ஒழிய, ஏனையீற்றுப் பெயர்கள் விளியேலா, எ - று.

எ - டு. அவை:--யான், யாம், நாம், எல்லோரும், எல்லீரும், எல்லாம், தாம் என்பன.

(11)