னகர ஈறு விளியேற்குமாறு

126.அவற்றுள்,
அன்னெ னிறுதி ஆவா கும்மே.

நிறுத்த முறையானே னகர ஈறு விளியேற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள், அன் என்னு மீற்றினையுடைய பெயர் ஆ என விளி ஏற்கும், எ - று.

ஈறென்பது ஈற்றினையுடைய பெயரை.

எ - டு. சோழன், சோழா; வெற்பன், வெற்பா; சாத்தன், சாத்தா எனவரும்.

(12)