னகர ஈற்றுள் விளி ஏலாதன
தானென் பெயரும் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரும் அன்றி யனைத்தும் விளிகோ ளிலவே.
னகார ஈற்றுப் பெயருள் விளி ஏலாதன உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். தான்; அவன், இவன், உவன்; அத்தன்மையன் அத்தன்மையான்; அன்னான், அனையான்; யான், யாவன் என வருவன விளி ஏலா; எ - று.
(19)